search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா படகு"

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
    • தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திருவள்ளு வர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மாதம் சீரமைப்பு பணி நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமே கடலில் வெள் ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்கு கிறது. இதைத் தொடர்ந்து விவேகா னந்தா என்ற மற்றொரு சுற்றுலா படகையும் சீர மைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்தப் படகு சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத் துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இந்த படகு சீரமைக்கும் பணி அவசர அவசரமாக 3 நாட்களில் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிவ டைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் விவேகானந்தா என்ற படகு இன்று காலை கடலில் இறக்கி சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வெள்ளோட்டம் விடப்பட்டது.

    அதன்பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டது.

    • முற்றுகை போராட்டத்திற்கு மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு
    • மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    மணக்குடி காயலில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா படகு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையில் படகு சவாரி விடுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் மணக்குடி காயலில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் படகில் முற்றுகை போராட்டம் நடத்த திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பாரதிய ஜனதா மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் கூறுகையில், மணக்குடி காயல் பகுதியில் சுற்றுலா படகு வசதி செய்வதனால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்படும். எனவே அந்த பகுதியில் சுற்றுலா படகு வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    பள்ளம்-மணக்குடி சாலை கடந்த 10 ஆண்டகளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிய அறிவுறுத்தல்
    • கேரளா படகுவிபத்து எதிரொலி

    கன்னியாகுமரி

    கேரளா மாநிலம் மலப்பு ரம் மாவட்டம் பரப்பனங் காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது.

    இந்த படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்ப டுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் இறங்கி உள்ளது. இங்கு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும். படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×